சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில், முதலில் பரவிய கொரோனா வைரஸ், சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் மிக வேகமாகப் பரவியது. சீனாவைத் தவிர தென் கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, இத்தாலி, இந்தியா, ஈரான் உள்ளிட்ட 100 நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, உலகம் முழுவதும் 1,10,000 பேர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஏஎப்பி (Agence France-Presse) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவில் சுமார் 80,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 3 ஆயிரத்து 119 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.