தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கால் செய்தால் கொரோனா?'- புது முயற்சியைக் கையாண்ட மத்திய சுகாதாரத்துறை - கொரோனா

கொரோனா தொற்றைத் தடுக்க மத்திய சுகாதாரத்துறை புது முயற்சியைக் கையாண்டுள்ளது.

கால் செய்தால் கொரோனா
கால் செய்தால் கொரோனா

By

Published : Mar 9, 2020, 4:26 PM IST

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய சுகாதாரத்துறை புது முயற்சியை கையாண்டுள்ளது. ஜியோ, ஏர்டெல்லில் ஒருவருக்கு போன் செய்தால் காலர் டியூன் வருவதற்கு பதில் விழிப்புணர்வு குரல் வரும் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில், "கொரோனா தொற்றை நம்மால் தடுத்திட முடியும். இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டை அல்லது டிஷ்யு பேப்பரை பயன்படுத்த வேண்டும்.

அவ்வப்போது கைகளை சோப்பைக் கொண்டு கழுவ வேண்டும். கண், வாய், மூக்கை தொடக் கூடாது. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தள்ளி இருங்கள்" என்ற விழிப்புணர்வு குரல் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க:கொரோனாவுக்கு குட்பை சொன்ன 100 வயதான முதியவர்!

ABOUT THE AUTHOR

...view details