தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொரோனா வைரஸ் எதிரொலி : புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பொதுமக்கள் சந்திப்பு ரத்து - Corona virus attack

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடக்கவிருந்த பொதுமக்கள் சந்திப்பு இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Corona Virus
Corona Virus

By

Published : Mar 5, 2020, 12:20 PM IST

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஈரான், இத்தாலி உள்ளிட்ட நான்கு நாட்டு பயணிகள் இந்தியாவுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கக் கூட்டமாக இருக்கும் இடங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதாக, பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை

இந்த நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நாள்தோறும் நடத்தப்பட்டு வந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகள் அடங்கிய மனுக்களை நுழைவுவாயில் முன்பு உள்ள பெட்டியில் போடலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவில் கொரோனா: 6 பேருக்கு உறுதி!

ABOUT THE AUTHOR

...view details