தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் புதிதாக 591 பேருக்கு கரோனா! - புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர்

புதுச்சேரி: புதிதாக இன்று (செப்.4) ஒரே நாளில் 591 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.

மல்லாடி கிருஷ்ணாராவ்
மல்லாடி கிருஷ்ணாராவ்

By

Published : Sep 4, 2020, 3:21 PM IST

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை 10 மணியிலிருந்து இன்று (செப்.4) காலை 10 மணி வரை 1, 846 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதில், இன்று புதிதாக 591 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 20 பேர் இறந்துள்ளனர்.
இதுவரை புதுச்சேரியில் மொத்தம் 16 ஆயிரத்து 172 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரத்து 674 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். சிகிச்சை பலனின்றி இதுவரை 280 பேர் இறந்துள்ளனர்.
இன்று மட்டும் 395 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1,801 பேரும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மூன்று ஆயிரத்து 417 பேரும் உள்ளனர்.

எனவே பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details