தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவுக்கு தெலங்கானாவில் முதல் உயிரிழப்பு! - telenagana corona first death

ஐதராபாத்: தெலங்கானாவில் கரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

கரோனா
கரோனா

By

Published : Mar 28, 2020, 7:20 PM IST

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸிலிருந்து தப்பிக்க முடியாமல் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். இந்த தொற்றின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை நாட்டில் 918 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அந்த வகையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் சைபாபாத் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், 74 வயதான முதியவர் ஒருவர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவர், கடந்த 14ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதன் மூலம் தெலங்கானாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:ரயில் பெட்டியில் கரோனா சிகிச்சை வார்டா?.. பலே பலே!

ABOUT THE AUTHOR

...view details