தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுவையில் 13 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை!

புதுச்சேரி: 13 லட்சம் பேருக்கு மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக புதுவை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.

minister
minister

By

Published : Apr 30, 2020, 5:55 PM IST

புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில், "ஏனாம் தொழிலாளர்களை ஊருக்குள் அனுமதிக்க முயற்சித்த முதல்வர் நாராயணசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சரின் முயற்சியால் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே அனுமதி கிடைத்துள்ளது.

புதுச்சேரியை பொருத்தவரை 3 பேருக்கு மட்டுமே தொற்று உள்ளது தற்போது 2,628 பேருக்கு சோதனை நடத்தியதில் 2 ஆயிரத்து 150 பேருக்கு தோற்று இல்லை என தெரியவந்துள்ளது. இன்னும் 70 பேருக்கு ஆய்வு முடிவுகள் வர வேண்டியுள்ளன. குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தில் 13 லட்சத்து 4 ஆயிரத்து 200 பேரிடம் மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 95 விழுக்காடு மக்களுக்கு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

வெளியில் இருந்து ஊருக்குள் வந்தவர்கள் வெளியே சென்றவர்களின் விபரம் கேட்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஊரடங்கு நீடிப்பது பற்றி முதலமைச்சர் அறிவிப்பார். புதுச்சேரி அரசின் உத்தரவிற்கு மக்கள் நன்கு ஒத்துழைப்பு தருகின்றனர். இது தொடர வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:குமரியில் இளைஞருக்கு கரோனா - நண்பர் தலைமறைவு

ABOUT THE AUTHOR

...view details