காஷ்மீரின் சோபூர் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த பாதுகாப்புப் படையினரை நோக்கிய பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டனர்.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதால், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.
அப்போது மூன்று வயது சிறுவன் ஒருவன் தனது தாத்தாவுடன் காரில் சென்றுகொணடிருந்தார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அந்த காரும் சிக்கிக் கொண்டது. அதில் இருந்த முதியவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இருப்பினும், காரிலிருந்து இறங்கிய முதியவர், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே கொல்லப்பட்டிருப்பதாக அந்த முதியவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தனது தாத்தாவின் உடல் அருகே, அந்தச் சிறுவன் அமர்ந்கொண்டிருக்கும் புகைப்படம் காண்போர் நெஞ்சை பதற செய்கிறது. நல்வாய்ப்பாக இந்தத் துப்பாக்கிச் சூட்டில், அந்தச் சிறுவனுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இந்தத் துப்பாக்கிச் சூட்டிலிருந்து அந்தச் சிறுவனை ஜம்மூ காஷ்மீர் காவல் துறையினர் பத்திரமாக காப்பாற்றியுள்ளதாக காஷ்மீர் மண்டல காவல் துறையினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
முன்னதாக, அனந்த்நாக் நகரில் கடந்த வாரம் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு வயது சிறுவன் கொல்லப்பட்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பிய 143 தூதரக அலுவலர்கள்