டாமோ மாவட்டத்தின் அட்கேடா கிராமத்தைச் சேர்ந்தவர் கேன்டா பாய் லோதி(45). இவரும், இவரது மகன் கோல்லு என்பவரும் கிரமத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அட்கேடா கிராம பஞ்சாயத்து செயலாளர் காவல் துறையினருக்கு தகவலளித்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற துணை ஆய்வாளர் சவிதா, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த லோதியை கடுமையாக தாக்கியுள்ளார்.
பெண் தாக்கப்பட்ட விவகாரம் - துணை ஆய்வாளரிடம் விசாரணை! - beats up
போபால்: மத்திய பிரதேசத்தின் டாமோ மாவட்டத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பெண், அவரது மகன் ஆகியோரை கடுமையாக தாக்கிய துணை ஆய்வாளவரிடம் விசாரணை நடத்த அம்மாவட்ட காவல் காண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
துணை ஆய்வாளரிடம் விசாரணை
அதைத் தடுக்க முற்பட்ட அவரது மகன் கோல்லுவையும் தாக்கியுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேக் குமார் சிங்கிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை நடத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.