பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தன்னை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் தொலைபேசியில் அழைத்ததாகவும், தொலைபேசியில் தன்னை நாக்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற வைக்க காங்கிரஸ் கட்சியினர் விரும்புகின்றதாக அவர் கூறியதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியினர் என்னை ஆதரிக்கின்றனர் - நிதின் கட்கரி
மும்பை: "நான் மக்களவைத் தோ்தலில் வெற்றிபெற காங்கிரஸ் கட்சியினர் விரும்புகின்றனர்" என நிதின் கட்கரி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடல்ரீதியாக காங்கிரஸ் கட்சியினர் கட்சிக்காக உழைத்தாலும், மனரீதியாக தன்னுடன் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கூறியதாக நிதின் கட்காரி கூறினார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நிதின் கட்கரி 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறையும் அதே தொகுதியில் பாஜக சார்பாக களம் இறங்கியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு நெருங்கியவராக கருதப்படும் நிதின் கட்காரி ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் உள்ள நாக்பூரில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.