மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துவருகிறது. பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை என்ற நிலையில், 114 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சி, கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சி செய்துவருகிறது.
இந்நிலையில், எம்எல்ஏக்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்க பாஜக அரசு முயற்சிகளை முன்னெடுத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று காலை அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஹர்தீப் சிங் டங் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மத்தியப் பிரதேச அரசியலில் புயல் வீசத் தொடங்கியுள்ளது.