இந்தியா - சீனா எல்லையில் நடந்த மோதலுக்கு பிறகு பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டது. அந்த காணொலியில், பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசியதையும், அது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல் குறித்தும் ஒப்பீடு செய்யப்பட்டிருந்தது.
முதலாவதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியவை குறிப்பிடப்பட்டிருந்தன. அதில், “இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை. இந்திய எல்லைக்குள் யாரும் இல்லை. இந்தியாவின் ஒரு அங்குலத்தைக்கூட யாரும் கைப்பற்றவில்லை” என பேசியவை குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்திய சீன விவகாரம்: பிரதமர் அலுவலகத்தின் முரண்பட்ட விளக்கம் பிரதமர் அலுவலகம் தரப்பில், “இந்திய எல்லைப் பகுதிக்குள் யாருடைய அத்துமீறலும் இல்லை. இந்தியாவின் ஒரு அங்குலத்தைக்கூட யாரும் கைப்பற்றவில்லை” என கூறப்பட்டிருந்தது. இது பிரதமர் மோடி பேசியதுடன் முரண்பட்டிருப்பதாக அக்காணொலியில் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: 'இந்திய எல்லைக்குள் சீனப் படை ஊடுருவவில்லை' - பிரதமர் மோடி