தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கொஞ்சம் படிங்க சார்' - மோடிக்கு காங்கிரசின் குடியரசு தின பரிசு! - congress trolls Narendra modi

மக்களிடையே வெறுப்புணர்வை பரப்புவதை விட்டுவிட்டு இந்திய அரசியலமைப்பை படியுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளது.

congress trolls Narendra modi
congress trolls Narendra modi

By

Published : Jan 26, 2020, 8:02 PM IST

Updated : Jan 26, 2020, 8:41 PM IST

71ஆவது குடியரசு தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோலகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. டெல்லி ராஜபாதையில் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை பறக்கவிட்டார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்யும் வகையில், காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளது. அதில், இந்திய அரசியலமைப்பு பிரதியை அமேசான் தளத்திலிருந்து பிரதமர் மோடிக்கு ஆர்டர் செய்துள்ளது போன்ற படம் ஒன்றை காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.

மேலும் அதில், "அன்புள்ள மோடி, அரசியலமைப்பு விரைவில் உங்களை வந்தடையும். மக்களிடையே வெறுப்புணர்வை பரப்புவதிற்கிடையே உங்களுக்கு நேரம் கிடைத்தால், இதைப் படியுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: குடியரசு தினக் கொண்டாட்டம்: காங்கிரஸ் நிர்வாகிகள் அடிதடி!

Last Updated : Jan 26, 2020, 8:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details