2019 நாடாளுமன்றத் தேர்தலில்மேற்கு வங்க மாநிலத்தில்காங்கிரஸ்-இடதுசாரிக் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள 43 தொகுதிகளில் இடதுசாரிக் கூட்டணி சார்பில்போட்டியிடஇருக்கும் 25 வேட்பாளர்களின் பெயர்களைஇரண்டு நாட்களுக்கு முன்புஅக்கட்சி அறிவித்தது.
இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் கட்சிமேற்கு வங்க மாநிலத்தில் தன்னிச்சையாகப்போட்டியிடஉள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன்நாத்மித்திராசெய்தியாளர்களிடம்கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின்ஆலோசனையின்றிமார்ச் 15ஆம் தேதிஇடதுசாரிக் கூட்டணிக்கட்சிகள் சார்பில்போட்டியிடவுள்ள25 வேட்பாளர்களின் பெயர்களை அது அறிவித்துள்ளது.
இடதுசாரிக் கட்சிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் இதுவரை ஏதும் பலன் அளிக்காததால்,மேற்கு வங்கத்தில் பாஜக,திருணமூல்காங்கிரஸ் கட்சிகளைஎதிர்த்துதனியாகத் தேர்தலில் போட்டியிட உள்ளோம்.
இவ்வாறு அவர்தெரிவித்தார்.