தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீன விவகாரம் குறித்து ஆலோசிக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் - நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்

டெல்லி: சீனாவுடனான மோதல் குறித்து ஆலோசனை நடத்த நாடாளுமன்றத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

By

Published : Jun 25, 2020, 3:57 PM IST

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு அதிகரித்துவரும் நிலையில், இந்தியா - சீனா நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது. அதுமட்டுமில்லாமல் பெட்ரோல், டீசல் விலை தொடர் ஏற்றம் கண்டுவருகிறது. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க நாடாளுமன்றத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறுகையில், "முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது, முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய் நாடாளுமன்றத்தை கூட்ட கோரிக்கை விடுத்தார். அன்றைய பிரதமர் அதனை ஏற்றுக் கொண்டார். கூட்டத்தை ஏன் கூட்டவில்லை என நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்ப வேண்டும்” என்றார்.

இதுகுறித்து, காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணிஷ் திவாரி கூறுகையில், "1962ஆம் ஆண்டு, இவ்விவகாரத்தை முன்னிறுத்தி வாஜ்பாய் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவர் ஆகியோர் தங்களின் அதிகாரத்தை அரசின் மீது பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதனை செய்யாமல் நாடாளுமன்றத்தை முடக்குவது துரதிர்ஷ்டவசமானது" என்றார்.

இதையும் படிங்க: லஷ்கர்-இ-தொய்பா கூட்டாளிகள் 5 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details