மக்களவை தேர்தலுக்கான கூட்டணி முடிவுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் மதச்சாா்பற்ற ஜனதாதளம் கூட்டணி பேச்சுவாா்த்தை முடிவுக்கு வந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி மதச்சாா்பற்ற ஜனதா தளத்தின் தலைவா் டானிஷ் அலி பங்கேற்றனர்.
கர்நாடகாவில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் 20 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதில் சமரசம் ஏற்பட்டு 20 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும், 8 தொகுதிகள் மதச்சாா்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கபட்டுள்ளன. ஒக்களிகா சமூகம் அதிகம் வசிக்க கூடிய உத்தர கன்னடா, சிக்கமகளூரு, ஷிமோகா, மாண்டியா போன்ற தொகுதிகளில் மதச்சாா்பற்ற ஜனதாதளம் களம் இறங்க உள்ளது.
பல நாட்களாக இழுபறி நீடித்து வந்த நிலையில், பழைய மைசூாில் உள்ள தொகுதிகளை ஜனதா தளத்துக்கு விட்டு கொடுத்து காங்கிரஸ் கூட்டணியை பலபடுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் வரும் ஏப்ரல் 18 மற்றும் 23 தேதிகளில் இரண்டு கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல்நடைபெற உள்ளது.