புதுச்சேரி பாகூர் சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர் தனவேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளும் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், எம்எல்ஏ தனவேல் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
நாராயணசாமி மீண்டும் முதலமைச்சரானால் காங்கிரஸுக்குதான் வீழ்ச்சி - நாராயணசாமியால் காங்கிரஸ் கூடாரம் காலியாகும்
புதுச்சேரி: 2021ஆம் ஆண்டிலும் முதலமைச்சராக நாராயணசாமி நீடித்தால் காங்கிரஸ் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் தனபால் குற்றஞ்சாட்டினார்.
அதில், "புதுச்சேரியில் நடைபெறும் இந்த ஆட்சியில் ஊழல் பட்டியலை தயாரித்து வைத்துள்ளேன். இதனை கட்சி தலைமையிடம் கொடுப்பேன். காங்கிரஸ் கட்சியில் ஊழல்வாதிகள் இருப்பதால் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துவிட்டார். அப்படி ஒரு ஊழல்வாதி (நாராயணசாமி) புதுச்சேரியிலும் இருக்கிறார். 2021ஆம் ஆண்டு தேர்தலிலும் நாராயணசாமி முதலமைச்சராக நீடித்தால் காங்கிரஸ் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும்.
இந்த ஆட்சியிலுள்ள அனைத்து அமைச்சர்களும் நில மோசடியில் ஈடுபடுகின்றனர். புதுச்சேரியில் தனியார் ஜவுளிக்கடை திறக்க பல கோடி ரூபாய் கை மாறியுள்ளது" என்றார்.