புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைசந்தித்துபேசினார்.
அப்போது, காங்கிரஸின்கதாநாயகனாக கட்சியின்தேர்தல் அறிக்கை விளங்குவதாகவும், பாஜக கட்சியினர் அதனைக் கண்டு பயந்து விட்டதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும், தேர்தலைதிசை திருப்பவேண்டும் என்ற நோக்குடன் காங்கிரஸ் கட்சி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் பரப்பி வருவதாக குற்றம்சாட்டிய நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி குறித்து குறை கூற எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமிக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை எனக் காட்டமாக தெரிவித்தார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட மக்களவைத் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட, அதனைபுதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பெற்று கொண்டார்.
இவர்களுடன் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், துணைத் தலைவர் நீல கங்காதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.