ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்திலுள்ள பெய்க்போரா கிராமத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவரான ரியாஸ் நாய்கோவை புதன் கிழமை இரவு (மே 5) சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காஷ்மீர் பகுதியில் இணையச் சேவை முடக்கப்பட்டது.
பாதுகாப்புப் படையினரின் இந்த செயலை பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராட்டிவருகின்றனர். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "ரியாஸ் நாய்கோ என்ற பயங்கரவாதியை நீதிக்கு முன் நிறுத்திய பாதுகாப்புப் படையினருக்கு வாழ்த்துகள். அப்பாவி பொதுமக்களைக் கொல்லும் பயங்கரவாதிகள் ஒருபோதும் தண்டனையிலிருந்து தப்பக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.