புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் பேட்டியிடுகிறார்.
இந்நிலையில், புவனேஸ்வரை ஆதரித்து என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று கிருஷ்ணா நகர் பிரதான சாலை, ரெயின்போ நகர் பிரதான சாலையில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கசாமி, "ஆளும் காங்கிரஸ் அரசு தங்களால் செய்ய முடியாத நலத்திட்டங்களை ஆளுநர் தடுப்பதாக தினமும் சொல்லிக் கொண்டு வருகின்றனர். எத்தனை ஆண்டாக இதனைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆளும் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.