ராஜீவ் காந்தியின் 75ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் ஆகஸ்ட் 20ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அவரின் நினைவுகளை போற்றும் விதமாக டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, "1984ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
'அதிகாரத்தை வைத்து ஜனநாயகத்திற்கு குழி தோண்டவில்லை' - சோனியா காந்தி - Rajiv Gandhi
டெல்லி: ராஜீவ் காந்தி ஒருபோதும் அதிகாரத்தை வைத்து ஜனநாயகத்திற்கு குழி தோண்டவில்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
Sonia Gandhi
இருந்தபோதிலும் அச்சம் நிறைந்த சூழ்நிலையை அவர் உருவாக்கவில்லை. மக்களின் சுகந்திரத்தை பறிக்கவில்லை. ராஜீவ் காந்தி தன் அதிகாரத்தை வைத்து ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கவில்லை. பிரிவினைவாத இயக்கங்கள்தான் இந்தியாவின் கருத்தாக்கத்தை மாற்ற முயற்சிக்கிறது. ராஜீவ் காந்தியின் கொள்கைகளை வைத்து அதனை வீழ்த்த வேண்டும்" என்றார்.