தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர்கள் ராகுலுடன் ஆலோசனை! - ராகுல் காந்தி

டெல்லி: காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், அக்கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

kamal nath, Ashok Gehlot

By

Published : Jul 1, 2019, 5:12 PM IST

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகவுள்ளதாக காங்கிரஸ் செயற்குழுவில் அவர் தெரிவித்தார். இதனை காங்கிரஸ் செயற்குழு மறுத்தபோதிலும் அவர் தன் பதவி விலகல் முடிவில் பிடிவாதமாக உள்ளார்.

அவரின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து 120 பேர் விலகினர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் ராகுல் காந்தியை அவரது வீட்டில் இன்று சந்தித்து வருகின்றனர்.

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல் நாத், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் ராகுல் காந்தியைச் சந்தித்து அவரின் பதவி விலகல் முடிவை திரும்பப் பெற கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details