"பாஜகவில் சிந்தியா எவ்வாறு நடத்தப்படுகிறார்? நான் மாதவ்ராவ் சிந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றியுள்ளேன். மாதவ் ராவுடன் ஒப்பிடுகையில், ஜோதிராதித்யா செயல்பாடுகள் நியாயமற்றன. காங்கிரஸ் மாதவராவ், ஜோதிராதித்யா ஆகியோருக்கு நிறைய மரியாதை, வாய்ப்பை வழங்கியது" என்று திக்விஜய சிங் ட்வீட் செய்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த மாத தொடக்கத்தில் காங்கிரஸ் தலைவர் பிரேம்சந்த் குடு, ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது தந்தை மாதவ்ராவ் சிந்தியாவை "கடார்" (துரோகிகள்) என்று அழைத்திருந்தார்.
இந்தூரின் சான்வர் தொகுதியில் போட்டியிடும் குடு, 2018 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் சேர காங்கிரஸை விட்டு வெளியேறினார். ஆனால் பின்னர் மார்ச் மாதம் ஜோதிராதித்யா சிந்தியா வெளியேறிய பின்னர், அவர் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திரும்பினார்.
"துரோகிகள் காரணமாக நான் காங்கிரஸை விட்டு வெளியேற நேர்ந்தது. நான் எம்.பி.யாக இருந்தது எல்லோருக்கும் தெரியும். ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு (மக்களை) காட்டிக்கொடுத்த வரலாறு உள்ளது. மாதவ்ராவ் சிந்தியா கட்சியை விட்டு வெளியேறியபோது, நான் அவருக்கு எதிராக பரப்புரை செய்தேன், என்றார்.
காங்கிரசின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா இந்தாண்டு மார்ச் 11 ஆம் தேதியன்று கட்சியில் இருந்து விலகினார். அவருக்கு விசுவாசமாக இருந்த 25 கட்சி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காங்கிரஸை விட்டு வெளியேற சிந்தியா, பாஜகவில் சேர்ந்தார.
25 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததையும், முன்னதாக மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் இறந்ததையும் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில் 28 இடங்களில் இடைத்தேர்தல் நடைபெறயுள்ளது. 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், பாஜகவில் தற்போது 107 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் 88 பேரும் உள்ளனர். 4 சுயேட்சை எம்எல்ஏக்கள், 2 பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஒரு சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ உள்ளனர்.
இதையும் படிங்க: 'நான் பாஜக தொண்டன், காங்கிரஸ் குறித்து பேச மாட்டேன்'- ஜோதிராதித்ய சிந்தியா