நாட்டில் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 348 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதிலும், பாஜக மட்டும் தனியாக 302 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.
பாஜகவின் இந்த அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் தலைவர் அமித் ஷா ஆகியோர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்துப் பேசினர்.
அப்போது, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசுகையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் 14 மாநிலங்கள், நான்கு ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் ஒரு இடத்திலும் கூட வெற்றிபெறவில்லை என்றார்.