தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் - காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு - puducherry kamaraj nagar election

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமார் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

ஜான்குமார்

By

Published : Sep 28, 2019, 4:17 PM IST

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது. அதன்பிறகு ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி நாங்குநேரியில் ரூபி மனோகரனை வேட்பாளராக அறிவித்துள்ளது.

அதேபோன்று புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு ஜான்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு 10 பேர் விருப்பமனு அளித்தனர். இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு இறுதி வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர்ச்சியான ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று மாலையே இந்து அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details