கடந்த 02ஆம் தேதி காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னையில் தமிழ்நாடு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். இந்நிலையில் நேற்று (டிச. 04) புதுச்சேரி வந்த குண்டுராவ் தலைமையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுவையில் தேர்தல் வியூகம் வகுக்கும் காங்கிரஸ்! - Puducherry Congress Party Office
புதுச்சேரி: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முன்னிலையில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், அமைச்சர் ஷாஜகான், முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் கட்சி தற்போதைய நிலவரம் குறித்தும், காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களின் கருத்துகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இன்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க:கோயில் காளை உயிரிழப்பு - ஆட்டம் பாட்டத்துடன் இறுதி அஞ்சலி