பாஜக சார்பில் போட்டியிட்டு பல முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சத்ருகன் சின்ஹா. கடந்த இரு முறை பாட்னா சாஹிப் மக்களவைத் தொகுதியில் நின்று அமோக வெற்றி பெற்றிருந்தார். ஆனால் 2019 மக்களவை தேர்தலில் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிட அவருக்கு பாஜக வாய்ப்பு வழங்கவில்லை.
பாட்னா சாஹிப் தொகுதியில் சத்ருகன் சின்ஹா வேட்பு மனு தாக்கல் - வேட்பு மனு
பாட்னா: பீகார் மாநிலம் பாட்னா சாஹிப் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சத்ருகன் சின்ஹா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சத்ருகன் சின்ஹா
இதனால் அதிருப்தி அடைந்த அவர், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். அங்கு அவருக்கு எதிர்பார்த்தப்படி பாட்னா சாஹிப் மக்களவை தொகுதியும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னா சாஹிப் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.