மேற்குவங்கத்தில் 34 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த கம்யூனிஸ்ட் ஆட்சியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2011ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவந்தது. 2014ஆம் ஆண்டு பிறகு மேற்குவங்கத்தில் வலுப்பெற ஆரம்பித்த பாஜக, இந்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடந்த மக்களவைத் தேர்தலில் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வென்று சாதனை படைத்தது.
மீண்டும் இணையும் காங்கிரஸ் - இடதுசாரிகள்! - காங்கிரஸ்
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளது.
CPI(m) - Congress
இந்நிலையில், மேற்குவங்கத்தில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை வீழ்த்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து நடக்கவிருக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் ஒரு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.