தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘காங்கிரஸ் ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டது’ - மனோஜ் திவாரி - டெல்லி சட்டப்பேரவை

டெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக்கொண்டது என்று டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.

Manoj Tiwari on AAP's win
Manoj Tiwari on AAP's win

By

Published : Feb 10, 2020, 4:04 PM IST

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை (டிசம்பர் 8) தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்குகள் நாளை (டிசம்பர் 11) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

பாஜக வெற்றியடையாமல் இருக்க, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட்டதாக அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.டி.எஸ் துளசி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "சட்டப்பேரவைத் தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக்கொண்டது. மீண்டும் வெற்றிபெறுவோமா என்ற நம்பிக்கை ஆம் ஆத்மி கட்சியிடமே இல்லை.

இத்தேர்தலில் அவர்கள் (ஆம் ஆத்மி) வெற்றி பெற்றால் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்வதாகக் கூறுவார்கள். இதுவே நாங்கள் வெற்றிபெற்றால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றஞ்சாட்டுவார்கள்" என்றார்.

மேலும், பாஜக ஜார்க்கண்ட் மாநிலத்தில் தோல்வியடைந்தபோதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறவில்லை என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதாக ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் 62.59% வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம்

ABOUT THE AUTHOR

...view details