பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி சிங் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். இந்த மரணம் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்த பிரச்னை தொடர்பாக மகாராஷ்டிரா மற்றும் பிகார் அரசு இடையே மோதல் போக்கு நிகழ்ந்துவருகிறது. மகாராஷ்டிராவின் சிவசேனா கூட்டணி அரசை எதிர்கட்சியான பாஜக தொடர்ச்சியாக விமர்சித்து அழுத்தம் கொடுத்துவருகிறது. இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்து பாஜக பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் லாபம் தேட நினைப்பதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.