மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் ஐந்து கட்டங்களுக்குத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. களத்தில், எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை குற்றம்சாட்டுவதும், ஆளும் பாஜக எதிர் அணியினரை கடுமையாகத் தாக்குவதுமாக தேர்தலுக்கான பரப்புரைகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.
‘காங்கிரஸ் ஒரு அழுமூஞ்சி குழந்தை’ - அருண் ஜேட்லி! - பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி: காங்கிரஸ் ஒரு அழுமூஞ்சி குழந்தை என மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறயதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். இதில் சிலவற்றில் முகாந்திரம் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இது தொடர்பாக தனது வலைப்பதிவில் (Blog) பதிவிட்டுள்ள மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான அருண் ஜேட்லி, "தேர்தல் நடத்தை விதிகள், பேச்சுரிமைக்கு அச்சுறுத்தலாக அமைவதை ஒருபோதும் ஏற்க முடியாது. சமீபத்தில் எதிர்க்கட்சியினர், தேவையின்றி அதிக அளவில் தேர்தல் விதிமீறல் புகார்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்து வருகின்றனர். ஒரு அழுமூஞ்சி குழந்தையை போல இந்த போக்குக்கு காங்கிரஸ் முன்னோடியாகத் திகழ்கிறது", என காட்டமாக விமர்சித்துள்ளார்.