கார்நாடகாவிலிருந்து மல்லிகார்ஜூன் கார்கே காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். மேலும், முன்னாள் பிரதமர் தேவகவுடா, இரண்டு பேர் பாஜக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க சிறப்பு விசாரணை குழு கோரும் காங்கிரஸ்! - காங்கிரஸ்
பெங்களூரு: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூன் கார்கே, அவரது மகன் பிரியாங்க் கார்கேவுக்கு தொலைபேசியில் வந்த மிரட்டல் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரியுள்ளது.
இதற்கிடையே அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மல்லிகார்ஜூன் கார்கேவுக்கும் அவரது மகன் பிரியாங்க் கார்க்கேவுக்கும் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்த நபர் ஆங்கிலம், இந்தியில் பேசியதாக பிரியாங்க் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அவர் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும் இதனை அரசு எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.