தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநிலங்களவையில் தொடரும் பாஜகவின் ஆதிக்கம்: தொடர் தோல்வியில் காங்கிரஸ்! - மாநிலங்களவையில் பாஜக

டெல்லி: மாநிலங்களவையில் வரலாற்றில் முதல்முறையாக குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களை காங்கிரஸ் கொண்டுள்ள நிலையில், பாஜக கூட்டணி நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை பெற்றுள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

By

Published : Nov 3, 2020, 4:28 PM IST

மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரம்தான் நீண்ட காலமாகவே இருந்தவந்தது. இதனைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக, அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றியை பெற தொடங்கின. இதன் விளைவாக, 242 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது.

வரவாற்றில் முதல்முறையாக 38 உறுப்பினர்களை மட்டும் பெற்று காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில், பாஜக வேட்பாளர் ஹர்தீப் சிங் பூரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இரண்டு இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கும் உத்தரகாண்டில் ஒரு இடத்திற்கும் நடைபெற்ற தேர்தலில் 9 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், பாஜகவின் எண்ணிக்கை 92ஆக உயர்ந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் 5 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இதனை தவிர்த்து, தேசிய ஜனநாயக கூட்டணியில், இந்திய குடியரசு கட்சி (அத்வாலே), அசாம் கன பரிஷத், மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, பாமக, போடோலாந்து மக்கள் முன்னணி ஆகிய சிறிய கட்சிகள் தலா ஒரு இடங்களை பெற்றுள்ளது.

மொத்தமாக, பாஜக கூட்டணிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. இதனை தவிர்த்து நியமன உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. பெரும்பான்மை பெற 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. முக்கிய பிரச்னைகளில், அதிமுக, பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளன.

இதையும் படிங்க: இந்தியன் ரயில்வே பயணிகள் பிரிவில் 90% வருவாய் குறைவு!

ABOUT THE AUTHOR

...view details