இது தொடர்பாக இன்று(ஜூலை 14) தனது ட்விட்டர் பதிவில் அமைச்சர் ஹர்தீப் சிங், "காங்கிரஸ் கட்சியில் அதிக செல்வாக்குள்ள ஒரு சக்திவாய்ந்த தலைவர் என்னை ஜூலை 4 ஆம் தேதி மதியம் 12:05 மணிக்கு தொடர்புகொண்டு வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். லோதி பங்களாவை மற்றொரு காங்கிரஸ் எம்.பி.க்கு ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனால் பிரியங்கா தொடர்ந்து அங்கேயே இருக்க முடியும் என்றார். தயவுசெய்து எல்லாவற்றையும் பரபரப்பாக்காதீர்கள் "என கூறினார்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, இது தொடர்பாக பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் அவர் அளித்துள்ள விளக்கத்தில், "யாராவது உங்களை அழைத்து எனக்காக பேசியிருந்தால் அவரது அக்கறைக்கு நான் நன்றி கூறுவதாக சொல்லிவிடுங்கள், அதே போல உங்கள் கருத்திற்கும் நன்றி. ஆனால் அது உண்மையில்லை. நான் அத்தகைய கோரிக்கையை எதுவும் உங்களிடம் முன்வைக்க விரும்பவில்லை.