இந்தாண்டின் தொடக்கத்தில் வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள், எதிர்பாளர்களுக்கு இடையே நடைபெற்ற வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
டெல்லி வன்முறை: உபா சட்டத்தில் ஒருவர் கைது - தஸ்லாம் அகமத்(
டெல்லி: டெல்லி வன்முறையில் தொடர்பிருந்ததாகக்கூறி பயிற்சி மைய உரிமையாளர் ஒருவரை டெல்லி சிறப்புக் காவலர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் (உபா சட்டம்) கைதுசெய்துள்ளனர்.
நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி, தற்போது டெல்லி சிறப்புக் காவலர்கள் தெற்கு டெல்லியின் சங்கம் விகார் பகுதியைச் சேர்ந்த தஸ்லாம் அகமத்(36) என்ற பயிற்சி மைய உரிமையாளரைக் கைதுசெய்துள்ளனர். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கல்ஃபிசா என்பவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்ததாகக் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
முன்னதாக, இவர் சாஃப்ராபாத் காவல் துறையினரால் கடந்த ஏப்ரல் மாதம் கைதுசெய்யப்பட்டு, இரண்டு வாரங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வடகிழக்கு டெல்லி பகுதியான சாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற வன்முறையில் ஏதேனும் தொடர்பிருக்கலாம் என எண்ணிய காவலர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்துள்ளனர்.