தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம்; தக்கரே - பாவர் சந்திப்பு - மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நிலவிவரும் சூழலில், அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை கூட்டணிக் கட்சித் தலைவர் சரத் பவார் சந்தித்தார்.

Maha govt
Maha govt

By

Published : May 26, 2020, 7:59 PM IST

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாதி கூட்டணியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது.

தேர்தலுக்குபின் பாஜகவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திவருகின்றது.

இந்நிலையில் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அம்மாநில ஆளுநர் பி.எஸ். கோஷயாரியைச் சந்தித்தார். வெறும் மரியாதை நிமித்தமாகக் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக சரத் பவார் தரப்பு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா முதமைச்சர் உத்தவ் தாக்கரேவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் கூட்டணி தொடர்பான கருத்துகள் பரிமாறப்பட்டதா அல்லது ஆட்சி தொடர்பான வழக்கமான சந்திப்பா என்ற விவரம் தெரியவில்லை.

இந்த சந்திப்புக்குப்பின் பேசிய சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மகா விகாஸ் அகாதி கூட்டணியில் எந்தவித சிக்கலும் இல்லை. மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆம்பன் பேரழிவு : பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி அளித்த அமெரிக்க தொண்டு நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details