தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டிஜிட்டல் மயமாக்கப்படும் அரசு பள்ளிகள் - கேரள அரசு அதிரடி - Pinarayi Vijayan on digitalization of public schools

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் முற்றிலும் டிஜிட்டல்மயமாக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Pinarayi Vijayan
Pinarayi Vijayan

By

Published : Oct 12, 2020, 12:14 PM IST

இது குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய கேரள முதலமைச்சர் பினாராயி விஜயன், "அரசுப் பள்ளிகளை டிஜிட்டல்மயமாக்குவதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகள் முற்றிலும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட முதல் மாநிலமாக, கேரள மாநிலம் இருக்கும்.

ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்திற்காக 16,027 பள்ளிகளுக்கு 3,74,274 டிஜிட்டல் சாதனங்கள் விநியோகிக்கப்பட்டன. இதன் முதல் கட்டமாக, ஹைடெக் ஆய்வகங்களுடன் கூடிய ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், எட்டு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 45,000 ஹைடெக் வகுப்பறைகள் தற்போது தயாராக உள்ளன. KITE (கேரள உள்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான தொழில்நுட்பம்) திட்டத்தின் கீழ், இவை செயல்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details