புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று (நவ.19) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, "புதுச்சேரியில் கரோனா பாதிப்பு குறைந்துவிட்டது. இருப்பினும் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். இரண்டாவது அலை தாக்காமல் தடுக்க மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கரோனா தடுப்பு மருந்து வந்தபின் புதுச்சேரியில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான செலவை அரசு ஏற்கும்.
இலவசமாக கரோனா தடுப்பு மருந்து என பேட்டி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் சட்டவிரோத செயல்கள் பற்றி குடியரசுத் தலைவர், பிரதமர், உள் துறை அமைச்சர் ஆகியோருக்கு புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து கிரண்பேடி சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறார். சட்டவிதிகளை மீறி புதுச்சேரி வளர்ச்சியை ஆளுநர் கிரண்பேடி தடுக்கிறார்.
அமைச்சரவைக்கு தொல்லை கொடுப்பதாக நினைத்து மக்களை கிரண்பேடி வஞ்சிக்கிறார். பிரதமர் தட்டிக் கேட்பது இல்லை. மக்கள் நலத் திட்டங்களைத் தடுத்து 40 கோப்புகளை டெல்லிக்கு அனுப்பி உள்ளார். தேவையின்றி கோப்புகளை டெல்லிக்கு அனுப்புவதாக அலுவலர்களே குற்றஞ்சாட்டுகின்றனர்.
புதுச்சேரிக்கு தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள் கொண்டுவர அரசு முயற்சித்தாலும் அவர் தடுக்கிறார். அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டு திடல் விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிட்டு தொல்லை கொடுக்கிறார்" என்றார்.
இதையும் படிங்க: புதுவை தனி தேர்வாளர்கள் மீண்டும் தேர்வெழுத ஒப்புதல் கோரி நாராயணசாமி கடிதம்!