புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்றவர் ஜான்குமார். அதையடுத்து, புதுச்சேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதற்காக பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், நாராயணசாமி அத்தொகுதியில் வெற்றி பெற்று முதலமைச்சரானார்.
ஜான்குமார் வீட்டில் காங்கிரஸ் கட்சிக் கொடியேற்றிய நாராயணசாமி - pudhucherry MLA Jankumar
புதுச்சேரி: காமராஜர் நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜான்குமார் வீட்டில் இறக்கப்பட்ட காங்கிரஸ் கொடியை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஏற்றிவைத்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, காமராஜ் நகர் தொகுதியில் ஜான்குமார் வெற்றி பெற்றார். நெல்லித்தோப்பு தொகுதியில் ராஜினாமா செய்ததிலிருந்து அதிருப்தியில் ஜான்குமார் இருந்துவருவதாகக் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில், ஜான்குமார் தனது வீட்டில் காங்கிரஸ் கொடியை இறக்கி வைத்துள்ளார். அந்தத் தகவல் அறிந்த முதலமைச்சர் நாராயணசாமி, அவரது வீட்டிற்கு நேரில் சென்று காங்கிரஸ் கொடியை ஏற்றிவைத்து அதிருப்தி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படிங்க:நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் - நாராயணசாமி ஆவேசம்