தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘நான் விரைவில் குணமடைவேன்’ - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா - CM BSY shares video message from Manipal hospital

கரோனா நோய்க் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, தான் விரைவில் குணமடைந்துவிடுவேன், கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா

By

Published : Aug 4, 2020, 4:07 AM IST

கர்நாடகம்: கரோனா நோய்க் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, தான் விரைவில் குணமடைந்துவிடுவேன் என்றும், கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா (77), அவரது மகள் பத்மாவதிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருவருக்கும் லேசான அறிகுறிகள் இருந்தபோதிலும், அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இச்சூழலில், தனது உடல்நிலை குறித்து எடியூரப்பா காணொலி மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் "கவலைப்பட ஒன்றுமில்லை. நான் விரைவில் வீடு திரும்பி பணிகளைத் தொடங்குவேன். தேவையான பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அதில் எந்த சிக்கலும் இல்லை என்பது தெரியவந்தது.

கர்நாடக முதலமைச்சர் மகளுக்கு கரோனா பாதிப்பு!

நான் விரைவில் குணமடைவேன். அரசுப் பணிகள் எதுவும் பாதிக்கப்படாமல் இருக்க ஞாயிறு முதல் அலுவலர்களுடன் தொடர்பிலேயே உள்ளேன். இன்று மூத்த அலுவலர்களுடனும் பேசினேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details