கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் கனமழை பெய்துவருகிறது. கிருஷ்ணா, மாலாபிரபா, கதபிரபா ஆகிய ஆறுகளிலிருந்து வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய மாவட்டங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
கர்நாடகாவில் வெள்ளம்; ஹெலிகாப்டரில் பார்வையிட்ட எடியூரப்பா! - Karnataka Floods
பெங்களூரு: கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா பார்வையிட்டுள்ளார்.
எடியூரப்பா
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த உதவிகள் செய்து தரப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகா மட்டுமல்லாமல் கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.