தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேங்ஸ்டர் விகாஸ் தூபேயின் முக்கியக் கூட்டாளியை என்கவுன்ட்டர் செய்த உ.பி. போலீஸ் - கான்பூர் என்கவுன்டர் அமர் தூபே

லக்னோ: கான்பூர் என்கவுன்ட்டரில் தொடர்புடைய குற்றவாளி விகாஸ் தூபேயின் முக்கியக் கூட்டாளி அமர் தூபேயை உத்தரப் பிரதேச காவல் துறை சுட்டுக் கொன்றது.

Kanpur
Kanpur

By

Published : Jul 8, 2020, 11:13 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் எட்டுக் காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், பிரபல கேங்ஸ்டர் விகாஸ் தூபேயை அம்மாநில சிறப்பு அதிரடிப்படை வலைவீசித் தேடிவருகிறது. விகாஸ் தூபேவுடன் அவரது கூட்டாளிகள் 32 பேரும் தேடப்பட்டுவரும் நிலையில், நேற்று(ஜூன் 7) அமர் தூபே என்ற முக்கியக் கூட்டாளி என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டார்.

அம்மாநிலத்தில் உள்ள ஹமிர்பூர் மாவட்டத்தின் மவுத்ஹா பகுதியில் அமர் தூபே பதுங்கியிருக்கும் தகவல் காவல் துறைக்குக் கிடைத்துள்ளது. அங்கு சென்று அமரை காவல் துறையினர் சுற்றிவளைத்தபோது, அமர் காவலர்களை நோக்கி சுடத் தொடங்கியுள்ளார். அதற்கு காவல் துறை பதில் தாக்குதல் நடத்தியதில் அமர் கொல்லப்பட்டார்.

விகாஸ் தூபேவுடன் அமர் தூபே

முன்னதாக உத்தரப் பிரதேசத்தின் முக்கிய ரவுடியான விகாஸ் தூபேயை காவல் துறையினர் கடந்த 2ஆம் தேதி (ஜூலை 2) கைது செய்ய சென்றனர். அப்போது விகாஸ் தூபேவின் ஆள்கள் காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதலில், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட எட்டு காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவல் துறையினர் மீது நடத்தப்பட்ட இந்த கொலை வெறித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கான்பூர் என்கவுன்ட்டர் வழக்கு : விகாஸ் தூபே கூட்டாளிகளின் புகைப்படங்கள் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details