தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காலநிலை மாற்றம், கரோனாதான் மக்களை ஒன்றிணைய வைத்துள்ளது - தலாய் லாமா - காலநிலை மாற்றம்

தர்மசாலா: காலநிலை மாற்றமும், கரோனா வைரஸும் தான் மக்களை ஒன்றிணைத்து வேலை செய்ய கற்றுக்கொடுக்கிறது என ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம், கரோனாதான் மக்களை ஒன்றிணைய வைத்துள்ளது -தலாய் லாமா
காலநிலை மாற்றம், கரோனாதான் மக்களை ஒன்றிணைய வைத்துள்ளது -தலாய் லாமா

By

Published : Jul 7, 2020, 11:30 PM IST

திபெத்தின் புத்த மதத் தலைவர் தலாய் லாமா நேற்று (ஜூலை.6) தனது 85ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதில், உங்கள் அன்பு என் நெஞ்சை தொட்டுள்ளது. தற்போது நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். இன்னும் அதிக நாள் ஆரோக்கியத்துடன் இருந்து மனிதகுல சேவையை தொடர வேண்டும் என எண்ணுகிறேன்.

நாம் வாழும் தற்போதைய உலகம், முன்பு தனித்திருந்தும் தன்னிறைவு பெறவில்லை. இப்போது காலநிலை மாற்றத்தாலும், கரோனா வைரஸ் பெருந்தொற்றினாலும் நாம் ஒன்றிணைந்து செயல்பட கற்றுக்கொடுக்கிறது.

அதனால் மனிதகுலத்தின் ஒற்றுமை குறித்து நாம் இனியேனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க...400 கி.மீ பயணம்...கரோனா உறுதி செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த ஆண் குழந்தை!

ABOUT THE AUTHOR

...view details