கரோனா வைரஸ், லாக்டவுன் ஆகிய காரணங்களால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறை தற்போது முற்றிலும் மாறியுள்ளது. குறிப்பாக பள்ளிக்குச் சென்று பாடங்களை கற்றுவந்த மாணவர்கள் தற்போது ஆன்லைன் வகுப்பு மூலம் பயின்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்பு நகர வாசி மாணவர்களுக்கு ஏற்புடையதாக இருந்தாலும், கிராமப்புற மாணவர்களுக்கு அது எட்டாக்கனியாகவே உள்ளது. போதிய இணையசேவை இல்லாமல் உள்ள கிராமங்களுக்கு ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்று வருகின்றனர்.
அந்த வகையில், சத்தீஸ்கரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி கொமகான் கிராமத்தில் 220 மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். மகாசமுந்த் மாவட்டத்தின் கொமகான் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் விஜய் சர்மா.