தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இறக்கப்போவதாக கூறி விடுமுறை கேட்ட மாணவன்' - கடிதம் வைரல் - பள்ளி மாணவன்

லக்னோ: கான்பூரில் எட்டாம் பகுப்பு படிக்கும் மாணவன் தான் உயிரிழக்கப்போவதாகக் குறிப்பிட்டு விடுமுறை கோரி பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கடிதம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

leave letter

By

Published : Sep 3, 2019, 8:33 AM IST

உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூரில் தனியார் பள்ளியில் பயின்று வரும் எட்டாம் வகுப்பு மாணவன், விடுமுறை கேட்டு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விடுமுறை கடிதம் கொடுத்துள்ளான்.

அதில் மாணவன் குறிப்பிட்டிருந்ததாவது, சார் எனக்கு விடுமுறை வேண்டும் ஆகஸ்ட் 20ஆம் தேதி 10 மணியளவில் 'நான் உயிரிழக்கவுள்ளேன்'. ஆகையால் தாங்கள் எனக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று எழுதியிருந்தான். மாணவன் எழுதியிருந்ததை, தலைமை ஆசிரியர் சிறிதும் கவனிக்காமல் அதில் கையெழுத்திட்டு விடுமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

விடுமுறை கடிதம்

இதையடுத்து அச்சிறுவனது பெற்றோர்கள் கூறியதாவது, சிறுவன் தவறுதலாக எழுதியுள்ளான், அவனது பாட்டியின் பெயரை குறிப்பிடுவதற்கு பதிலாக அவனது பெயரை எழுதிவிட்டான் என்றனர்.

இந்நிலையில் அச்சிறுவன் எழுதிய விடுமுறை கடிதம் தற்போது இணையத்தில் வைரலாக பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கடிதத்தை படித்துப் பார்க்காமல் அலட்சியமாக கையெழுத்திடுவதா, என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details