தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நக்சல்களால் பொதுமக்களுக்கே அதிக பாதிப்பு: மத்திய உள் துறை அமைச்சகம்

நக்சல் இயக்கங்கள் நடத்திய தாக்குதல்கள் காரணமாக கடந்த எட்டு மாதத்தில் 68 பொதுமக்களும், 34 பாதுகாப்பு அலுவலர்களும் உயிரிழந்துள்ளனர்.

MHA
MHA

By

Published : Sep 21, 2020, 9:54 PM IST

நாட்டில் நக்சல் இயக்கங்களின் தாக்குதல் தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த எட்டு மாதங்களில் நக்சல் இயக்கங்கள் சார்ந்த தாக்குதல்கள் நாட்டில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக 68 பொதுமக்களும், 34 பாதுகாப்பு அலுவலர்களும் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம், பாதுகாப்புப் பணியினரைவிட பொதுமக்களே நக்சல் தாக்குதல் காரணமாக பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. அதேவேளை, இந்த எட்டு மாத காலகட்டத்தில் 817 நக்சல்வாதிகள் சரணடைந்துள்ளனர்.

2015-19 காலகட்டத்தில் நக்சல் போன்ற இயக்கங்கள் நடத்திய தாக்குதலில் 895 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் 318 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 318 நக்சல் வாதிகள் உயிரிழந்துள்ளனர் எனப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க:தேசிய பாதுகாப்புச் சட்டம்: நாடு முழுவதும் 1,200 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details