தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியுரிமை திருத்தச் சட்டம் பின்ணனி என்ன? - delhi violence

நீதி, சமத்துவம், சமூக நல்லிணக்கம் உள்ளிட்டவை அடங்கிய ஜனநாயகத் தன்மையுள்ள சட்டத்தை மட்டுமே அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் சர்ச்சை
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் சர்ச்சை

By

Published : Mar 15, 2020, 3:53 AM IST

இந்தியாவில், குடியுரிமை திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து பல போராட்டங்கள் எழுந்துள்ளன. இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் மாணவர்களும், பெண்களுமே. பெண்கள் காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்களின் உருவப்படத்தை கையில் ஏந்தி ஜனநாயகத்தை பாதுகாக்கும்படி கோஷமிட்டனர். இந்த போராட்டம், இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த தாக்கம், அஹிம்சை மற்றும் ஜனநாயகத்தை பாதிக்கும் பிம்பமாக வெளிப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் சர்ச்சை

இதில், வடகிழக்கு டெல்லியில் கலவரம் ஏற்பட்டு வாகனங்களுக்கு தீயிட்டப்பட்டது. அந்த சமயத்தில், இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்திருந்தார். அவருக்கு ராஷ்ட்ரபதி பவனில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கலவரம் உலக முழுவதுமுள்ள ஊடகங்களுக்கு பரவியது. ஐ.நா சபையிலும் இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மலேஷியா, துருக்கி, ஈரான் மற்றும் கனடா ஆகிய நாடுகளும் இதுகுறித்து கவலை தெரிவித்தன. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டம், உள்நாட்டு விவகாரம் எனினும் பல நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

உலகில் மிகவும் பிரபலமான நாளிதழ் தி எகானாமிஸ்ட் இந்தியாவில் பாகுபாடு உள்ளது என்றும் முஸ்லிம்களை ஒடுக்குகிறது மற்றும் அவர்களுக்கு எதிராக தான் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் பகிரங்கமாக குற்றச்சாட்டை நம் மீது வெளிப்படுத்தியது. மேலும் வன்முறையில் இந்திய அரசாங்கம் மக்களை காப்பாற்ற தவறிவிட்டது என்றும் பொருளாதார நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்றும் விமர்சனம் எழுப்பியது. இந்த சூழ்நிலை தொடர்ந்தால் இந்தியாவில் யார் முதலீடு செய்வார்கள் என்று கேள்வி எழுப்பியது.

இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடக்கும் இந்த போராட்டம் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரதமர் மோடி அவர்கள் பிற நாடுகளிருந்து பெற்ற நன்மதிப்பு மற்றும் இந்திய நாட்டின் நன்மதிப்பும் வீணாகிவிடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை ஏன் இந்திய அரசாங்கம் புரிந்துகொள்ள மறுக்கிறது? நம் நாட்டின் அமைதி மற்றும் உலகளாவிய பிம்பத்தை அழித்து ஏன் இந்த வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் அமல்படுத்தவேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் சர்ச்சை

குடியுரிமை திருத்தச் சட்டம் இரண்டு முரண்பாட்டை உள்ளடக்கியுள்ளது. ஒன்று துன்பப்படும் மக்களுக்கு தங்குமிடம் மற்றும் இந்திய குடியுரிமை வழங்குவது என்பது அனைவராலும் ஏற்கத்தக்கது. இன்னொன்று மக்களை மதத்தின் அடிப்படையில் விலக்கும்போது அந்த சட்டம் பாரபட்சமாக மாறுகிறது. இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால் எந்தஒரு அரசியல் கோட்பாடும் மதத்தின் அடிப்படியில் மக்களை விலக்கக்கூடாது.

குறிப்பாக பார்க்கப்போனால் நாம் அண்டை நாடுகள் அனைத்தும் ஒரு மதத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. தற்போதைக்கு அரசியல் எதிரிகளை மறந்துவிடுங்கள் ஷியா அல்லது அஹமதியா அல்லது ஹசராஸ் போன்ற இஸ்லாமியர்களுக்குள் உள்ள சிறுபான்மையினரை மறந்துவிடுங்கள். மேலும் துன்பப்படுகின்றவர்கள் பெரும்பாலோர் இஸ்லாமியர்களே. அஸ்ஸாமில் விரிவான தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உள்ள 19 லட்சம் குடிமக்கள் அல்லாதவர்களை தடுப்பு மையங்களுக்கு மாற்றியுள்ளது இது மிகவும் சிக்கலானது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் சர்ச்சை

மதவெறித்தனத்தை ஒருபோதும் அனுமதிக்காதீர். மதவெறிக்கு வன்முறை மூலம் தீர்வு காண முடியாது. மதவெறித்தனத்தை விமர்சிப்பவர்கள் பலர் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்குள் தஞ்சம் புகுகிறார்கள். இதைப் போன்றவர்கள் இந்தியாவில் தஞ்சம் புக தகுதியற்றவர்கள். அதே சமயம் இலங்கை போரில் துன்பம் அனுபவித்து நம் நாட்டிற்கு வரும் இலங்கை தமிழர்களுக்கு ஏன் இந்த சட்டம் கொண்டுவரவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. இந்த சட்டத்தின் மூலம் ஆண்டாண்டு காலம் இந்தியாவில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களை நாடு கடத்த முடியும் என்ற அச்சத்தையும் சிலர் கூறுகின்றனர். மத்திய அரசு அண்டை நாடுகளில் இருக்கும் சிறுபான்மையினரை கருத்தில் கொண்டு அனைவருக்கும் சமமான சட்டத்தை இயற்றவேண்டும்.

கடைசியாக,ஏன் இந்திய அரசாங்கம் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்திற்கு இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது?முதலில் நம் நாட்டு மக்களின் குறைகளை பூர்த்தி செய்யவேண்டும். இது தொடர்ந்தால் நம் மக்களுக்கு அரசின் மேல் நம்பகமின்மையை உருவாக்கிவிடும்.

மத்திய அரசு மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அதற்கான தீர்வுகளை செயல்படுத்தவேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற தேவையற்ற சட்டத்தை அமல்படுத்தாமல் பொருளாதாரம் மேம்பட அரசாங்கம் விரைந்து செயல் படவேண்டும். வேலைவாய்ப்பை அதிக அளவில் அமைத்து தர வேண்டும். இந்தியா தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது அதை சரிசெய்ய உற்பத்தித் துறையில் வளர்ச்சியை பெருக்கவேண்டும். நாற்பது ஆண்டுகள் காணாத வேலையின்மை இப்போது எழுந்துள்ளது. விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பு எனவே வேளாண்மைக்கு சிறந்த திட்டங்களை கொண்டு வரவேண்டும். சுய தொழில் அமைக்க மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிக அளவில் கொண்டு வர வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் சர்ச்சை

குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்த அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இந்த அரசாங்கம் செயல் படவேண்டும். நம் நாடு நீதி, சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கம், பாரபட்சம் காட்டாத அரசியலமைப்பு கொண்ட நாடு. இதுவே தற்போதைக்குத் தேவை. இதை கருத்தில் கொண்டு அரசாங்கம் செயல் பட வேண்டும் அதுவே சிறந்த ஜனநாயகம் ஆகும்.

இதையும் படிங்க: சரிவில் சந்தை: எந்தெந்த பங்குகளை வாங்கலாம்? நிபுணரின் கருத்தைக் கேட்கலாம்...

ABOUT THE AUTHOR

...view details