தெலங்கானா மாநிலத்தின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள மின்சார ஆலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், 9 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
மின்சார ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து: சிஐடி விசாரணை! - தெலங்கானா மின்சார ஆலை தீ விபத்து
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் மின்சார ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான விசாரணையை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சிஐடி-க்கு மாற்றியுள்ளார்.
Power plant fire accident
இச்சம்பம் குறித்து உள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டதன் உண்மை நிலையை அறிவதற்காக முதலமைச்சர் சந்திரசேகர ராவ், இந்த வழக்கை சிஐடி-க்கு மாற்றியுள்ளார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.