தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! - புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி நடத்துபவர் தனது குழுவினருடன் கடலுக்கு அடியில் சென்று கிறிஸ்துமஸ் கொண்டாடி அசத்தியுள்ளார்.

கிறிஸ்மஸ் விழா
கிறிஸ்மஸ் விழா

By

Published : Dec 26, 2020, 11:10 AM IST

நாடு முழுவதும் நேற்று (டிச. 25) கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளை நண்பர்களுடனும், உறவினர்களுடமும் பரிமாறிக்கொண்டனர்.

இதற்கிடையில் புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி நடத்தும் அரவிந்த், தனது குழுவினருடன் இணைந்து காந்தி சாலையில் இருக்கும் கடலுக்குள் 5 கிலோ மீட்டர் அடிவரைச் சென்று கிறிஸ்துமஸ் கொண்டாடி அசத்தியுள்ளார்.

ஆழ்கடலில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழா

இவரின் இந்தப் புதுவிதமாக நடைபெற்ற இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிவிசி பைப் மூலம் சாண்டா கிளாஸ் வாகனம் தயாரித்து, கடலுக்குள் இறக்கப்பட்டது. இவர்களின் இந்தப் புதுவிதமான கொண்டாட்டம் அப்பகுதி மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

ABOUT THE AUTHOR

...view details