தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'முதலமைச்சர் நிதிஷ்குமார் பேராசை கொண்டவர்' - சிராக் பாஸ்வான் குற்றச்சாட்டு

பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் மிகவும் பேராசை கொண்டவர் என்று லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிரக் பஸ்வான்
சிரக் பஸ்வான்

By

Published : Nov 5, 2020, 6:09 PM IST

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான், பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராக அவ்வப்போது கருத்து தெரிவித்துவருகிறார்.

இந்நிலையில் நிதிஷ்குமார் மிகவும் ஊழல் நிறைந்த முதலமைச்சர் என்று சிராக் பாஸ்வான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "நிதிஷ்குமார் மிகவும் பேராசை கொண்டவர், அதிகாரத்தில் இருக்க எதை வேண்டுமானாலும் செய்வார். அரசியல் பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி முன்பு கைக்கட்டி நின்றார்.

அவர் லாலுவைச் சந்திக்க ராஞ்சிக்குச் (சிறை) செல்லலாம் அல்லது முதலமைச்சர் பதவியைக் காப்பாற்ற தேஜஸ்வி யாதவைச் சந்திக்கலாம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "முதலமைச்சர் நிதிஷ்குமாரால் பிகார் நிலைமை மோசமடைந்தது. ஒரு வாக்கு அவருக்குச் சென்றால்கூட, அது பிகாரின் எதிர்காலத்தைப் பாதிக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் செய்த பணிகளின் விவரங்களை வழங்குமாறு நான் தொடர்ந்து அவரிடம் கேட்கிறேன்.

ஆனால் அவர் என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார். அவரது பதவிக்காலத்தில் ஊழல் கடுமையாக உயர்ந்துள்ளது. வடக்கு பிகாரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை அவர் நிவர்த்தி செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details