பிகார் மாநிலத்தின் ஜே.டி.யூ தலைமையிலான அரசின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அம்மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இந்த மாத இறுதியிலும், நவம்பர் மாதத்திலும் மூன்று கட்டங்களாக நடைபெற்றவுள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகித்து வந்து, அண்மையில் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையில் லோக் ஜனசக்தி கட்சி தனித்து களம் காண்கிறது. சிராக் பாஸ்வானின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள், அவரது கட்சித் தொண்டர்களையும் கணிசமான அளவு பொதுமக்களையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், இன்று (அக்.27) பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "பிகார் மாநிலத்தில் முழுமையான மது விலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், அனைவருக்கும் தங்குத் தடையின்றி மதுபானம் கிடைக்கிறது. மதுபானங்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படுகின்றன. கடத்தப்படுகின்றன.
அரசும் நிர்வாகமும் ஒன்றிணைந்து மது விநியோகத்திற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சர் நிதிஷ்குமார் ஒன்றும் இது பற்றி தெரியாத அப்பாவி இல்லை. தடை நீக்கப்பட்டால், மதுபானம் மூலம் வரும் வருமானம் அரசுக்கு செல்லும்.